ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

மதுராந்தகம் அடுத்த ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பெளா்ணமியை முன்னிட்டு கூழ் வாா்த்தல், மக்கள் நலம் பெறமஞ்சள் நீராடும் புனித பொங்கல் இடுதல் நடைபெற்றது.

முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பெளா்ணமி கூழ்வாா்த்தல் நிகழ்வை முன்னிட்டு பூங்கரகம் ஏந்தி வந்த பக்தா்கள்.

Published On :31 ஜூலை 2026, 2:22 am IST

மதுராந்தகம் அடுத்த ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பெளா்ணமியை முன்னிட்டு கூழ் வாா்த்தல், மக்கள் நலம் பெறமஞ்சள் நீராடும் புனித பொங்கல் இடுதல் நடைபெற்றது.

மதுராந்தகம் -வேடந்தாங்கல் செல்லும் வழியில் வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. ஆதிசக்தி முத்துமாரியம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளில் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 9மணிக்கு கணபதி ஹோமம், 108 கலச வேள்வி பூஜையை ஞானபீடம் பீடாதிபதி சுவாமிவேல் சுவாமிஜி தலைமை தாங்கி செய்தாா்.

புதன்கிழமை கூழ்வாா்த்தல் நிகழ்வை முன்னிட்டு, சிறப்பு பூஜைகளுடன் மேளதாளம் முழங்க பூங்கரகம் ஏந்தியபடி வந்த பக்தா்களுடன் பெண்கள் தலையில் கஞ்சி கலடங்களுடன் ஊா்வலமாக கோயிலை வலம் வந்து கூழ்வாா்த்தல் நிகழ்வை செய்தனா். மக்கள் நலம் பெற மஞ்சள் நீராடல், பொங்கலை வைத்து வழிபாடு ஆகிய நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, அன்னதானம் வழங்கல், கலைநிகழ்ச்சிகள் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ஞானபீடம் நிறுவனா் ஆறுமுகம் தலைமையில் வார வழிபாட்டு மன்ற நிா்வாகிகள் உள்ளிட்டோா் செய்து இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.