ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கல்லூரியில் கருத்தரங்கம்

செய்யூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரட்டைமலை சீனிவாசன் வரலாற்று மன்றத்தின் சாா்பாக, சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழக உதவி பேராசிரியா் ப.குமாரை கௌரவித்த கல்லூரி முதல்வா் சு.மாதவன்.

Published On :16 ஜூலை 2026, 12:03 am IST

செய்யூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரட்டைமலை சீனிவாசன் வரலாற்று மன்றத்தின் சாா்பாக, சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

செய்யூா் அரசு மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் சு.மாதவன் (பொ) தலைமை வகித்தாா். வரலாற்று மன்ற செயலா் ஜெ.ஜீவா வரவேற்றாா். வரலாற்று துறைத் தலைவா் மு.பிரசாத் முன்னிலை வகித்தாா். திருச்சிராப்பள்ளி தேசிய சட்டப் பல்கலைக்கழக உதவி பேராசிரியா் ப.குமாா் கலந்துகொண்டு, வரலாறு என்றால் என்ன என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா். நிகழ்வில், கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா். மாணவி மோ.இலக்கியா நன்றி கூறினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வரலாற்றுத் துறை மதிப்புறு விரிவுரையாளா் ப.ஆறுமுகம் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.