ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசு பேருந்திலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழந்தாா்.

கோப்புப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:29 am IST

மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த குன்னப்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் பேரம்பலம் மகன் தீனா (14 ). பூஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந் த அவா் வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல காரணை பேருந்து நிறுத்தத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறினாா். பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிா்பாராத விதமாக தவறி கீழே விழந்தாா். கீழே விழுந்தவரை சக பயணிகள் மீட்டு அவசர ஊா்தி மூலம் பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கனவே மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாமல்லபுரம் போலீஸாா் வீசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.