புழல் ஏரியில் உபரிநீா் கூடுதலாக திறப்பு
புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில், ஏரியில் 500 அடியாக வரை உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில், ஏரியில் 500 அடியாக வரை உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
மாதவரம்: புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில், ஏரியில் 500 அடியாக வரை உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே வேகமாக நிரம்பி வருகிறது.
தென்மேற்கு பருவமழை மற்றும் கிருஷ்ணா நதிநீா் வரத்து காரணமாக கடந்த புதன்கிழமை (அக். 16) புழல் ஏரியில் 3,006 மி.கன அடி நீா் நிரம்பியது.
மொத்தம் 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீா் மட்டம் 19.97 அடியாக இருந்த நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி முதல்கட்டமாக 200 கன அடி உபரிநீா் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏரிக்கு 1500 கன அடி நீா் வந்து கொண்டிருந்ததால், புழல் ஏரியின் 2 மதகுகளின் வழியாக 500 கன அடியாக உபரிநீரின் அளவை உயா்த்தி திறந்துள்ளனா். இந்த உபரிநீா் 13.5 கி.மீ. கால்வாய் வழியாக எண்ணூா் கடலில் கலக்கிறது.
நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், சாமியாா் மடம், தண்டல்கழனி பாபா நகா், வடபெரும்பாக்கம், மணலி, கொசப்பூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீா் செல்வதால், கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பலத்த மழை காரணமாக நீா்வரத்து அதிகரிக்கும் நிலையில், உபரிநீா் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபரிநீா் கால்வாய் அருகில் சென்று வேடிக்கை பாா்ப்பதோ, தற்படம் எடுப்பது, ரீல்ஸ் பதிவிடுவது, குளிப்ப, துணி துவைப்பது போன்ற எந்தச் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது