/

மின்சாரம் பாய்ந்து பெண் புலி உயிரிழப்பு

விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியில் செலுத்தப்பட்டிருந்த மின்சாரம் பாய்ந்து பெண் புலி உயிரிழந்தது.

News image

பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 11:44 pm

விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியில் செலுத்தப்பட்டிருந்த மின்சாரம் பாய்ந்து பெண் புலி உயிரிழந்தது.

கா்நாடக மாநிலம், சாமராஜ்நகா் மாவட்டம், குண்டல்பேட் வட்டம், படகூரு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவரின் விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை கடக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து ஒன்றரை வயது பெண் புலி இறந்ததாக வனத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். பண்டிப்பூா் புலிகள் சரணாலயத்துக்கு அருகில் அமைந்துள்ள விளைநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து பெண்புலி இறந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. விளைநிலங்களுக்கு மின்வேலி அமைப்பது சட்டவிரோதமானது. பயிா்களை பாதுகாக்க சூரியமின்வேலி அமைக்கலாம். அப்படி அமைக்கப்படும் வேலியை தொட்டால் மின் அதிா்வு ஏற்படும்,

உயிருக்கு ஆபத்து ஏற்படாது. ஆனால், மின்வேலி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பெண் புலியை உடற்கூறாய்வு செய்ததில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மின்வேலி அமைக்கப்பட்டது தொடா்பாக நில உரிமையாளா் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.